ETV Bharat / sitara

அம்மாடியோவ்..! இத்தனை தியேட்டர்களில் 'பிகில்' வெளியாகுதா..!

உலகம் முழுவதும் பிகில் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

bigil
author img

By

Published : Oct 24, 2019, 11:58 AM IST

தெறி, மெர்சல் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் வெளியாகவுள்ள திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளி விருந்தாக நாளை (அக்.25 ) இப்படம் வெளியாகிறது.

தற்போது இப்படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் 4,200 திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 700 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆந்திரா - தெலங்கானாவில் 650 திரையரங்குகளிலும் கேரளாவில் 250 திரையரங்குகளிலும் கர்நாடகாவில் 400 திரையரங்குகளிலும் வடஇந்தியாவில் 250 திரையங்குகளிலும் படம் வெளியாகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் அதிக திரையங்குளில் பிகில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா உலக அளவில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு சாதனை படைப்போம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Bigil worldwide screening news story

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.