உலகளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில், புதிய படமாக 'நோ டைம் டூ டை' பிரமாண்டமாகத் தயாராகியுள்ளது. 25ஆவது ஜேம்ஸ் பாண்ட் படமான இதில் டேனியில் கிரேக் பாண்டாக நடித்துள்ளார்.
2006இல் வெளியான 'கேசினோ ராயல்' என்ற படம் மூலம் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் முதல் முறையாகத் தோன்றினார் டேனியல் கிரேக். கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்ட்ரே படங்களுக்கு அடுத்து இவர் நடித்துள்ள கடைசி பாண்ட் படமாக 'நோ டைம் டூ டை படம்' அமைந்துள்ளது. 'நோ டைம் டூ டை' செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமாக இனி தான் நடிக்கப் போவதில்லை என டேனியல் கிரேக் படக்குழுவினருடன் உணர்ச்சிப் பொங்க பேசிய காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமாக நடித்த டேனியல் கிரேக்கை கெளரவிக்கும்விதமாக இங்கிலாந்து அரசு அவரை கப்பல் படைத் தளபதியாக நியமித்துள்ளது.
இது குறித்து ஜேம்ஸ் பாண்ட் ட்விட்டர் பக்கத்தில், கெளரவ கப்பல் படைத்தளபதி பதவி தனக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
-
Daniel Craig’s farewell speech after wrapping No Time To Die, his last 𝒆𝒗𝒆𝒓 James Bond film. 🍸 @007 pic.twitter.com/xCqab3JK3z
— Filmthusiast (@itsfilmthusiast) September 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Daniel Craig’s farewell speech after wrapping No Time To Die, his last 𝒆𝒗𝒆𝒓 James Bond film. 🍸 @007 pic.twitter.com/xCqab3JK3z
— Filmthusiast (@itsfilmthusiast) September 17, 2021Daniel Craig’s farewell speech after wrapping No Time To Die, his last 𝒆𝒗𝒆𝒓 James Bond film. 🍸 @007 pic.twitter.com/xCqab3JK3z
— Filmthusiast (@itsfilmthusiast) September 17, 2021
இனி புதிகாக எடுக்கப்படும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாக யார் நடிப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை ஹாலிவுட் வட்டாரங்களில் பேச்சு தொடங்கியுள்ளது. மேலும் புதிய ஜேம்ஸ் பாண்டாக யார் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
Daniel Craig has been made an honorary Commander in the Royal Navy. Commander Craig said: “I am truly privileged and honoured to be appointed the rank of Honorary Commander in the senior service.” pic.twitter.com/5pPDdznejE
— James Bond (@007) September 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Daniel Craig has been made an honorary Commander in the Royal Navy. Commander Craig said: “I am truly privileged and honoured to be appointed the rank of Honorary Commander in the senior service.” pic.twitter.com/5pPDdznejE
— James Bond (@007) September 23, 2021Daniel Craig has been made an honorary Commander in the Royal Navy. Commander Craig said: “I am truly privileged and honoured to be appointed the rank of Honorary Commander in the senior service.” pic.twitter.com/5pPDdznejE
— James Bond (@007) September 23, 2021
இந்நிலையில், புதிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: 'விஜய்க்கு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் கொடுப்பேன்’ - மிஷ்கின்