ETV Bharat / sitara

காட்டு யானையிடம் சிக்கி தப்பித்த ஆண்ட்ரியாவின் 'கா' படக்குழு! - Wild elephant threatens Andrea starer Kaa movie

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தான் நடித்துள்ள படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தனித்து தெரிபவராக உள்ளார் ஆண்ட்ரியா. சமீபத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அந்த நபர் குறித்து தான் வெளியிடவிருக்கும் புத்தகத்தில் தெரிவிப்பதாகக் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். ஆனால் அந்த விவகாரம் குறித்து தற்போது பேசப்படாத நிலையில், 'கா' படத்தில் கமிட்டாகியுள்ள ஆண்ட்ரியா, அந்தப் படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக உள்ளார்.

ஆண்ட்ரியா நடிக்கும் கா
கா படத்தில் நடிகை ஆண்ட்ரியா
author img

By

Published : Nov 30, 2019, 11:34 PM IST

சென்னை: அடர்ந்த வனப்பகுதிக்குள் யாரும் செல்லாத இடங்களில் 'கா' படத்தை படமாக்கியுள்ள படக்குழுவினர்கள் இரவு ஷுட்டிங்கின் போது காட்டு யானையிடம் சிக்கி பின்னர் தப்பித்துள்ளனர்.

ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'கா' . இந்த படத்தில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார். படத்தில் கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறை மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபராக தோன்றவுள்ளார்.

கா படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் ஆண்ட்ரியா
Andrea as wild life photographer in Kaa movie

இந்தப் படம் முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படம் தயாராகி வருகிறது. 'கா' என்றால் காடு, கானகம் என்று பொருள்படும். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் நாஞ்சில்.

இதையடுத்து படம் குறித்து இயக்குநர் நாஞ்சில் கூறியதாவது, முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறோம். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாறில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக யானை ஒன்று வந்துவிட்டது.

நாங்கள் அனைவரும் பயந்துவிட்டோம் எங்களுடன் இருந்த வனக்காப்பாளர்கள் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள். இப்படி ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.

மேலும் 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்தக் காட்சிகளை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Intro:
நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் " கா "Body:ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் "கா" . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடித்துவருகிறார். இந்த படத்தில் கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.  முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.  " கா " என்றால்  காடு, கானகம் என்று பொருள்படும் இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்குகிறார் இயக்குனர்  நாஞ்சில் இந்த படம் குறித்து இயக்குனர் நாஞ்சில் கூறுகையில்,

முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடந்தது , அப்போது யாரும் எதிர்பாராத விதமாக  யானை ஒன்று வந்துவிட்டது.  நாங்கள் அனைவரும் பயந்துவிட்டோம்  எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள் இப்பட்டி ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.

Conclusion:30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்சிகளை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.