பாடகர் எஸ்.பி.பி மரணம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் எஸ்.பி.பி இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக உறவு வைத்திருக்கும், நடிகர் அஜீத் இதுவரை ஒரு இரங்கல் கூட வெளியிடாததால் சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அஜித் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று ஏராளமானவர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அஜித் தரப்பில் கூறப்படுவதாவது, “எஸ்பிபி மறைவு செய்தி கேட்டு அந்த நிமிடமே அஜித், எஸ்பிபி சரணுக்கு தொலைபேசி மூலம் தனது இரங்கலை தெரிவித்துவிட்டதாகவும், துக்க நிகழ்வு நிகழ்ந்துள்ள ஒரு வீட்டில் இரங்கல் தெரிவிப்பதாக கூறி புகைப்படம் எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் போன்று நடிகர் அஜித் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் முதன் முதலாக அறிமுகமான பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் அவரை சிபாரிசு செய்தது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'எஸ்பிபிக்கு நினைவு இல்லம் கட்டப்படும்’ - எஸ்பிபி சரண் தகவல்!