ETV Bharat / sitara

கரோனா குறித்து 8 மாதங்களுக்கு முன்பே கணித்த ஜோதிட சிறுவன்: சந்தோஷ் சிவன்

"கரோனா என்பது ஒரு உலகப்போர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது வைரசுக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போர். அரசாங்கங்கள் சம்பந்தப்பட்டதா என்பது உங்கள் வியூகம்."

SantoshSivan
SantoshSivan
author img

By

Published : Mar 29, 2020, 6:42 PM IST

கரோனாவின் பாதிப்பு எப்போது விலகும் என்பது குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

உலகப் பெருந்தொற்றான கரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கரோனாவில் இருந்து இந்த உலகம் எப்போது விடுபடும் என்பது தற்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. கரோனா எப்போது தனது கோரதாண்டவத்தை நிறுத்தும் என்பது மில்லியன் ட்ரில்லியன் டாலர் கேள்வி.

இந்நிலையில் கரோனாவில் இருந்து இந்த உலகம் எப்போது தப்பிக்கும் என்பது குறித்த செய்தியை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனாவில் இருந்து உலகம் எப்போது விடுபடும் என்பது குறித்து 8 மாதங்களுக்கு முன்பே ஜோதிட சிறுவன் ஒருவன் சரியாக கணித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

SantoshSivan
ஜோதிட சிறுவன் அபிக்யா ஆனந்த்

அதில், ஆகஸ்ட் 22, 2019 அன்று அபிக்யா ஆனந்த் என்ற ஜோதிட சிறுவன் தனது யூடியூப் சேனலில் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை உலகம் ஒரு கடினமான சூழலை சந்திக்கும். இந்த ஆறு மாத காலப்பகுதியில் உலகளாவிய நோய் பரவி ஒரு பதற்றம் அதிகரிக்கும். இதன் உச்சமே மார்ச் 31 ஆம் தேதி தெரியும். எப்படியோ மே 29 ஆம் தேதி இந்த கடின காலம் விலகிச் செல்லும் என்று கணித்துள்ளார்.

கரோனா பற்றி அபிக்யா ஆனந்த் கூறுகையில், கரோனா என்பது ஒரு உலகப்போர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது வைரசுக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போர். அரசாங்கங்கள் சம்பந்தப்பட்டதா என்பது உங்கள் வியூகம்.

மார்ச் 31ஆம் தேதியை கிளைமாக்சாக கருதுவதற்கு காரணம், செவ்வாய், சனி, வியாழனும் ஒன்றாக இணையும். அதேபோல் சந்திரனும் ராகுவும் இணையும். ராகு சந்திரனின் வடக்கு திசையாகும்.

ஜோதிடத்தை பொறுத்தவரையில், செவ்வாய், சனி, வியாழன், ஆகியவை சூரிய மண்டலத்தின் வெளிப்புற வளையத்தில் உள்ளது. அவை மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படுவதால், இது ஒரு அரிய நிகழ்வு. எனவே அவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது பூமியின் மீது அவற்றின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

சந்திரன், ராகு இணைப்பு மிகவும் சக்தி வாய்ந்தது. ஏனெனில் சந்திரன் நீரைப் பரப்பும் கிரகமாகும். இந்தக் காலத்தில் மனிதர்களுக்கு இருமல், தும்மல் இருக்கும். இதனால் இந்த நோய் மேலும் வேகமாக பரவும்.

இந்த பிரச்னை மே 29 ஆம் தேதி விலகும். ஏனென்றால் இந்தக் கோள்கள் பூமியை விட்டு அன்றைய தினம் விலகி வேறு திசைக்கு செல்லும். பொருளாதார மந்தநிலை 2021 நவம்பரில் முடிவடையும் என்று கூறியுள்ளார்.

அபிக்யா ஆனந்த் 2013ஆம் ஆண்டு பிரபல வார பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் வழங்கினார். அப்போது இந்தியாவில் தங்கம், வெள்ளி தொடர்பான விலையை கணித்துள்ளார். இவர் கூறியது பெரும்பாலும் உண்மையாகியுள்ளது.

அபிக்யா ஆனந்த் கூறியது போல் உலகம் இந்த கரோனாவில் இருந்து தப்புமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.