உலகம் முழுவதும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் மீ டூ இயக்கத்தின் மூலம், தங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் கில் பில், இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ட்ஜேங்கோ அன்ச்ஹெய்ண்ட் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீன் மீது நடிகைகள் ஜெஸிகா மேன், மிரிரம் ஹாலே ஆகியோர் கட்டாய பாலியல் வன்புணர்வு புகார்களை சமீபத்தில் தெரிவித்தது ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வெய்ன்ஸ்டீன் மீதான இந்த பாலியல் குற்றங்கள் நிரூபணமாகி அவர் குற்றவாளி என மேன்ஹேட்டன் நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, நெஞ்சு வலி மற்றும் படபடப்பு காரணமாக வெய்ன்ஸ்டீன் நியூயார்க் நகரைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை வெய்ன்ஸ்டீனின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.
வெய்ன்ஸ்டீனை குற்றவாளி என அறிவித்துள்ள மேன்ஹேட்டன் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் திருப்புமுனையாகவும் உலகம் முழுவதும் மீ டூ இயக்கத்திற்காக ஒலித்து வரும் குரல்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்திலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கவலைகள் போக்கி நடனமாடுங்கள் - சிம்ரன் வெளியிட்ட க்யூட் டான்ஸ் வீடியோ