ரெட்டைச்சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆரி. தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. தற்போது இவர் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர்கள் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் ’பத்து தல’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஆரி, அப்படத்தை பார்க்க காத்திருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆரி நடித்த நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணாதான் பத்து தல படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கிய ஷ்ரத்தாவின் ‘கலியுகம்’