தெலுங்கு சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவரும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகிறார்.
விஷ்ணு மஞ்சு, இயக்குநர் ஸ்ரீனு வைட்லா கூட்டணியில் 2007ஆம் ஆண்டு 'Dhee' படம் வெளியானது. இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
![vishnu](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20201123-wa0036_2311newsroom_1606121241_250.jpg)
இந்தக் கூட்டணியாது தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. 'டபுள் டோஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி நிறுவனம் சார்பாக அவாரம் பக்த மஞ்சு தயாரிக்கிறார்.
![vishnu](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20201123-wa0035_2311newsroom_1606121241_881.jpg)
விஷ்ணுவின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஸ்ரீனு வைட்லாவின் விருப்பமான எழுத்தாளர் கோபி மோகன் - கிஷோர் கோபு ஆகியோர் கதை எழுதியுள்ளனர்.
சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன் பணியாற்ற உள்ளார். இந்தப் படத்தில் நடிக்கவுள்ள கதநாயகி மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.