ETV Bharat / sitara

பெயருக்கு ஏத்த மாதிரியே இருக்கே! வெளியானது விஷாலின் 'ஆக்‌ஷன்' டிரெய்லர் - ஆக்‌ஷன் ட்ரெய்லர்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆக்‌ஷன்' திரைப்டத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

action
author img

By

Published : Oct 27, 2019, 5:15 PM IST

காமெடி, குடும்பப் படம், திரில், ஆக்‌ஷன் என அனைத்து ஜானர்களையும் கலக்கியவர் இயக்குநர் சுந்தர்.சி. இவர் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த 'ஆம்பள' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது.

தற்போது சுந்தர்.சியும், விஷாலும் மீண்டும் இணைந்துள்ளனர். முழு நீள ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு 'ஆக்‌ஷன்' என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டராக நடிக்கிறார். இதில் ஒரு உண்மையை கண்டுபிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்‌ஷன், சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படத்தில் அமைக்கப்பட்டிருந்த பல அதிரடி காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி (TURKEY), அசார்பைசான் (AZARBAIZAN), கேப்படோசியா (CAPPADOCIA), பாகு (BAKU), இஸ்தான்புல் (ISTANBUL), தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு (KRABI ISLAND), பேங்காக் போன்ற இடங்களில் நடைபெற்றது.

அதேபோல் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ், டேராடூன், ஹைதராபாத், சென்னை போன்ற பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ.கருப்பையா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றநிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 'ஆக்‌ஷன்' என்ற பெயருக்கு ஏற்றவாறு ட்ரெய்லர் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது. நவம்பர் மாதம் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Intro:Body:

Vishal love confirm movie

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.