சென்னை: ஆனந்த் சங்கர் எழுதி இயக்க, மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் 'எனிமி'. இந்தத் திரைப்படத்தில் ஆர்யாவும், விஷாலும் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை மிருனாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள 'எனிமி' படத்திற்கு, சாம் சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார். இவரது இசையில் சமீபத்தில் வெளியான எனிமி பட டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இந்தத் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படத்தை ஆயுதபூஜைக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு வருகிறது.
![எனிமி டப்பிங் பணிகள் மும்முரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-enemy-dubbing-script-7205221_05092021171721_0509f_1630842441_640.jpg)
இதையும் படிங்க: பா. ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் புதிய திரைப்படம்!