அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம், வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில், பிகில் படத்திற்கு போட்டியாக தனுஷின் பட்டாஸ், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அதனை படக்குழுவினர் மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து பிகில் படம் சிங்கிளாக வரும் என்று எதிர்பார்த்திருந்த சூழலில், தற்போது கார்த்தியின் கைதி படமும், விஷாலின் ஆக்ஷன் படமும் திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.