ETV Bharat / sitara

விஷாலின் 'ஆக்‌ஷன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! - விஷாலின் ஆக்‌ஷன் ரிலீஸ் தேதி

தீபாவளி விருந்தாக பிகில், கைதி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு ட்ரீட் தந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி - விஷால் படங்கள் ஒரே நாளில் வெளியாகி விருந்து படைக்கவுள்ளது.

ஆக்‌ஷன் படத்தில் விஷால் - தமன்னா
author img

By

Published : Nov 5, 2019, 4:44 PM IST

சென்னை: சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஆக்‌ஷன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு, அசத்தலான அதிரடி காட்சிகள் என முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியிருக்கும் படம் 'ஆக்‌ஷன்'. விஷால் - தமன்னா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா பூரி, சாயா சிங், கபீர் சிங், ராம்கி, யோகி பாபு, பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

படத்துக்கு இசை - ஹிப் ஹாப் தமிழா. ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இதையடுத்து படத்தின் பாடல்களை சிங்கிள் டிராக்காக படக்குழுவினர்கள் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது படத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அதன்படி படம் நவம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதேநாளில் விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' திரைப்படமும் ரிலீஸாகிறது.

Vishal and Tammannah in Action movie
ஆக்‌ஷன் படத்தில் விஷால் - தமன்னா

இரு படங்களின் ட்ரெய்லரும் ரசிகர்களைக் கவர்ந்து படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தற்போது சங்கத்தமிழன், ஆக்‌ஷன் ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி, தீபாவளிக்குப் பிறகு மற்றொரு டபுள் ட்ரீட்டை தரவுள்ளது.

இதையும் படிங்க:

இந்திய பெருங்கடலில் உருவாகிவரும் 'ஜூவாலை'

Intro:Body:

விஷாலின் ஆக்‌ஷன் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு, அசத்தான அதிரடி காட்சிகள் என முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகிக்கும் படம் 'ஆக்‌ஷன்'. விஷால் - தமன்னா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.