ETV Bharat / sitara

'ஆக்‌ஷன்' விஷாலை ரொமான்டிக் பக்கம் இழுத்த 'நீ சிரிச்சாலும்' ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்! - விஷால் படம்

மிலிட்டரி கமாண்டர் விஷால் ஒரு உண்மையை கண்டுபிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்‌ஷன்,சேசிங் என விறுவிறுப்பான காட்சிகள் அடங்கிய ஆக்‌ஷன் திரைக்கதையை அமைத்துள்ளனர்.

action
author img

By

Published : Oct 23, 2019, 9:25 AM IST

Updated : Oct 23, 2019, 11:54 AM IST

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆக்‌ஷன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது.

காமெடி, குடும்பப் படம், திரில், ஆக்‌ஷன் என அனைத்து ஜானர்களையும் கலக்கியவர் இயக்குநர் சுந்தர்.சி. இவரும், நடிகர் விஷாலும் கூட்டணியாக இணைந்து ஏற்கனவே 'ஆம்பள' திரைப்படம் வெளியானது. தற்போது சுந்தர்.சியும், விஷாலும் மீண்டும் இணைந்துள்ளனர். முழு நீள ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு 'ஆக்‌ஷன்' என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டராக நடிக்கிறார். இதில் ஒரு உண்மையை கண்டுபிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்‌ஷன், சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அமைத்துள்ளனர்.

இப்படத்தில் அமைக்கப்பட்டிருந்த பல அதிரடி காட்சிகளிலில் விஷால் டூப் இல்லாமல் நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி (TURKEY), அசார்பைசான் (AZARBAIZAN), கேப்படோசியா (CAPPADOCIA), பாகு (BAKU), இஸ்தான்புல் (ISTANBUL) தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு (KRABI ISLAND), பேங்காக் போன்ற இடங்களில் நடைபெற்றது.

அதேபோல் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ், டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ.கருப்பையா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளநிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டாராக்கான 'நீ சிரிச்சாலும்' பாடல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: நான் காமெடி இயக்குநர் இல்ல; ஆக்‌ஷன் இயக்குநர் - சுந்தர் சி!

Intro:Body:

action vishal

Conclusion:
Last Updated : Oct 23, 2019, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.