சென்னை: நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து "ராணா புரொடக்ஷன்ஸ்" எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (செப்.1) பூஜையுடன் தொடங்கியது.
இதற்கு தற்காலிகமாக விஷால் - 32 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். வினோத்குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அவரே கதை, திரைக்கதையையும் எழுதுகிறார். சாம் சிஎஸ் இசையமைப்பில், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் இந்தத் திரைப்படம் உருவாகிவருகிறது. திரைப்பட வசனங்களை இயக்குநர் வினோத்குமாருடன், பொன் பார்த்திபன் சேர்ந்து எழுதுகிறார்.
இதையும் படிங்க: வடிவேலுவின் நாய் சேகருக்குச் சிக்கல்!