'மான்ஸ்டர் இன் தி க்ளோசெட்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் பால் வால்கர். அதைத்தொடர்ந்து, ’பாஸ்ட் அண்ட ஃப்யூரியஸ்’ படத்தில் வின் டீசலுக்கு இணையான கதாபாத்திரத்தில் பால் வால்கர் நடித்திருந்தார். இதன் மூலம் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பால் வால்கர், கடந்த 2013ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரின் மரணம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், பால்வாக்கரின் மகள் மியோடோவ் வால்கரின் திருமணத்தின் போது தந்தை ஸ்தானத்தில் பிரபல நடிகரும், பால் வால்கரின் நண்பருமான வின் டீசல் நின்று நடத்திவைத்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
மியோடோவ் வால்கர் தனது காதலர் லூயில் ஆலனை திருமணம் செய்துகொண்டார். வின் டீசல் மணப்பெண்ணின் கையை பிடித்து அழைத்து வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது. பால்வால்கரின் நினைவாக வின் டீசல் தனது மகளுக்கு பாலின் சின்க்ளேர் என பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படப்பிடிப்பில் விபத்து - வின் டீசல் கண்ணீர்