விக்ரம் சுகுமாரன் இயக்கிய படம் மதயானைக் கூட்டம். இப்படத்தில்தான் பரியேறும் பெருமாள் கதிர் அறிமுகமாக, ஓவியா, எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, விஜி ஆகியோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது விக்ரம் சுகுமாரன் இராவண கோட்டம் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் சாந்தனு நடிக்கிறார்.
இந்நிலையில் விக்ரம் சுகுமாரன் மீண்டும் கதிரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு தமிழ் புத்தாண்டான இன்று வெளியானது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் படத்தை தயாரிக்கிறார்.