ETV Bharat / sitara

விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி' ரிலீஸ் தேதி அறிவிப்பு! - இயக்குநர் மணிகண்டனின் கடைசி விவசாயி திரைப்படம்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'கடைசி விவசாயி' திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி ரிலீசாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Jan 30, 2022, 2:49 PM IST

Updated : Jan 30, 2022, 2:59 PM IST

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் மணிகண்டன். இவரது இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'கடைசி விவசாயி'. இதில் விஜய்சேதுபதி நடித்திருந்தாலும் படத்தை ’நல்லாண்டி’ என்ற முதியவர்தான் தாங்கி நிற்கிறார்.

யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். வெகுநாள்களுக்கு முன்னரே வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம், கரோனா காரணமாக தாமதத்திற்குள்ளானது. ஓடிடியில் வெளியிடவும் முயற்சிகள் நடைபெற்றன.

இருப்பினும் திரையரங்குகளில் வெளியிடவே படக்குழுவினர் விரும்பினர். தற்போது கரோனா ஊரடங்கில் தமிழ்நாடு அரசு தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. எனினும், திரையரங்குகளில் 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி' திரைப்படமானது வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'உலகின் இனிமையான புன்னகை'; கரோனா பாசிடிவை வித்தியாசமாக தெரிவித்த கஜோல்!

Last Updated : Jan 30, 2022, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.