ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த 'ஃபர்ஸ்ட் கம்ப்' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளார். இந்தியில் இப்படத்திற்கு 'லால்சிங் சாதா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
இதனிடையே சமீபத்தில் ஆஸ்திரேலியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, அமீர் கானுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது அமீர்கானின் 'லால்சிங் சாதா' படத்தில் அமீரின் நண்பராக விஜய்சேதுபதி நடிக்கிறார். ஃபர்ஸ்ட் கம்ப் திரைப்படத்தில் வில்லியம்சன் நடித்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க காரணம், 'லால்சிங் சாதா'வில் அமீர்கானின் நண்பனாக நடிக்கும் கதாபாத்திரம் தமிழராக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் சேதுபதியை இந்த கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
விரைவில் படத்தில் நடிக்க உள்ள மற்ற கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.1994ஆம் ஆண்டு வெளியான ஃபர்ஸ்ட் கம்ப் திரைப்படம் ஆறு ஆஸ்கார் விருதை வென்றது குறிப்பிடத்தக்தது. விக்ரம் வேதா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.