ETV Bharat / entertainment

புதிய தோற்றத்தில் விஜய்சேதுபதி

ஒபாமா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் நானி பாலா தெரிவித்துள்ளார்.

vijaysethupathy on special role  pirthvi pandiyarajan movie  janagaraj leads in obama movie  புதிய தோற்றத்தில் விஜய்சேதுபதி  ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை  ஜெயசீலன் தயாரித்துள்ள படம் " ஒபாமா "
புதிய தோற்றத்தில் விஜய்சேதுபதி
author img

By

Published : Dec 18, 2021, 5:25 PM IST

Updated : Oct 10, 2022, 3:58 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. விஜய்சேதுபதி வித்தியாசமான கதைக்களம் மற்றும் வேறுபட்ட கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மற்றுமொரு படத்தில் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

J.B.J பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் " ஒபாமா "இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக பூர்நிஷா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் T.சிவா,தளபதி தினேஷ், கோதண்டம்,கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு - தினேஷ் ஸ்ரீனிவாஸ், இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்-கவிப்பேரரசு வைரமுத்து,எடிட்டிங் - B.லெனின்,நடனம் - சேகர்,ஸ்டண்ட் - தளபதி தினேஷ், மக்கள் தொடர்பு - மௌனம் ரவி, மணவை புவன்

தயாரிப்பு - ஜெயசீலன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நானி பாலா.

படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது..

இதுதொடர்பாக இயக்குநர் நானி பாலா கூறியதாவது :

"இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சமூகம் சார்ந்த கருத்துக்களை காதல், காமெடி கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கியுள்ளோம்.

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க உறுதி அளித்து இருந்தார், ஆனால் அவர் ஷூட்டிங் நேரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் நான் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டேன்.

நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்சேதுபதி

அதை பார்த்த நடிகர் ஜனகராஜ் என்னிடம் வந்து இரு குட்டி நான் ஒரு முயற்சி செய்கிறேன் என்றார். பின் அவரு 96 படத்தின் டைரக்டர் பிரேமமிடம் இந்த மாதிரியான படம் விஜய் சேதுபதி நடிப்பாரா என்று கேட்க, அவரும் உங்களுக்காக கேட்டு பார்க்கறேன் என்றார்! அதை கேட்டு அவரும் அண்ணனுக்காக நடித்து கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

இதை அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியலே! அவரை கேட்டால் நடிப்பார் என்று எப்படி தோன்றியது என்று ஜனகராஜிடம் கேட்டேன்? அதற்கு ஜனகராஜ் அவரோடு பழகிய போது தெரிந்தது என்றார். அது சீனியர் ஒருவருக்கான மரியாதை, தொழிலுக்கு காட்டும் நன்றி தான் அதற்கு காரணம் என்றார்.

உடனே நான் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை எழுதி 96 படத்தின் இயக்குனருக்கு வாட்ஸ் அப் செய்ய,அதை அவர் விஜய் சேதுபதிக்கு அனுப்ப அதை படித்த அவர் என் போன் நம்பர் வாங்கி என்னிடம் Brother படிச்சு பார்த்தேன், நல்லாருக்கு, நேரில் டிஸ்கஷன் செய்து எடுப்போம் என்றார்.

பிறகு அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் காட்சியை அவரோடு நேரில் டிஸ்கஷன் செய்தேன், பிறகு நடித்து கொடுத்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் ஆண்பாவம் படம் முதல் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறேன் பலரையும் கண்டு இருக்கிறேன். ஆனால் மக்கள் செல்வன் பட்டத்திற்கு ஏற்ற மனிதர் தான் விஜய் சேதுபதி என்று கூறினார்.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டது. விரைவில் இந்த ஒபாமாவின் ஆட்டத்தை திரையில் காணலாம் என்கிறார் இயக்குனர் நானி பாலா.

இதையும் படிங்க:Bigg Boss 5 இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

Last Updated : Oct 10, 2022, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.