தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்துள்ள, 'இது வேதாளம் சொல்லும் கதை' 'துருவ நட்சத்திரம்', 'க/பெ ரணசிங்கம்' ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
இதையடுத்து தற்போது இவர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ’your's shamefully 2’ படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் கார்த்திக் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மேலும் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், பணியாற்ற இசையமைப்பாளராக சதீஷ் ரகுநாதன் பணியாற்றுகிறார்.
-
What is Plan B? - @MiniStudio_ & @SixerEnt 's New Mystery Thriller starring @aishu_dil, titled as #ThittamIrandu (PLAN B)
— VijaySethupathi (@VijaySethuOffl) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Happy to Launch #ThittamIranduFirstLook@vinod_offl @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @satish_composer @Thandora_ @proyuvraaj pic.twitter.com/5sGe1rETDt
">What is Plan B? - @MiniStudio_ & @SixerEnt 's New Mystery Thriller starring @aishu_dil, titled as #ThittamIrandu (PLAN B)
— VijaySethupathi (@VijaySethuOffl) May 7, 2020
Happy to Launch #ThittamIranduFirstLook@vinod_offl @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @satish_composer @Thandora_ @proyuvraaj pic.twitter.com/5sGe1rETDtWhat is Plan B? - @MiniStudio_ & @SixerEnt 's New Mystery Thriller starring @aishu_dil, titled as #ThittamIrandu (PLAN B)
— VijaySethupathi (@VijaySethuOffl) May 7, 2020
Happy to Launch #ThittamIranduFirstLook@vinod_offl @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @satish_composer @Thandora_ @proyuvraaj pic.twitter.com/5sGe1rETDt
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ’திட்டம் இரண்டு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. போஸ்டரில் துப்பாக்கி, ஊசி, வாக்கி டாக்கி என்று பொருள்கள் உள்ளன.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'மன்னன் முட்டாளாக இருந்தால் நாடு உருப்படாது'- இயக்குநர் அமீர்