ETV Bharat / sitara

4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியான விஜய் சேதுபதி படம் - laabam movie

நடிகர் விஜய் சேதுபதி திரைப்படம் நான்கு மாதங்களுக்கு பிறகு இன்று (செப். 9) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
author img

By

Published : Sep 9, 2021, 11:11 AM IST

தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின. இதனையொட்டி திரையரங்கு உரிமையாளர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தனர்.

தற்போது மாநிலத்தில் தொற்று குறைந்துவருவதால் சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் ஆகஸ்ட் மாத இறுதியில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் பெரிய படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் நீண்ட மாதங்களுக்குப் பிறகு இன்றும், நாளையும் பெரிய படங்கள் வரிசையாக வெளியாகின்றன. அந்தவரிசையில் மறைந்த எஸ்.பி. ஜனநாதனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'லாபம்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

தலைவி
தலைவி

இதேபோன்று ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி நடித்துள்ள தலைவி திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் திரையரங்குகளை நோக்கிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.