சென்னை: 'மாஸ்டர்' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் தளபதி விஜய்க்கு தனது ட்ரேட்மார்க் அன்பு முத்தத்ததை தந்துள்ளார் விஜய் சேதுபதி.
'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டில் கூடுதல் நாளான பிப்ரவரி 29 ஆம் தேதியான இன்று நிறைவுபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.
அதன்படி இறுதி நாள் படப்பிடிப்பில் விஜய் - விஜய் சேதுபதி பங்கேற்க, அவர்கள் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தற்போது படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.
சிறப்பு வாய்ந்த நாளான இன்று, விஜய் சேதுபதி தனது ட்ரேட்மார்க் அன்பு முத்தத்தை தளபதி விஜய்க்கு தர, படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வை பார்த்த அனைவரும் கைதட்டி உற்சாகம் அடைந்தனர்.
முன்னதாக, இருவரும் வெறித்தானமாக மோதிக்கொள்வது போல் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இணையத்தை கதிகலங்க வைத்தனர்.
![Master shoot wrapped up](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/master-3rd-look-1_2902newsroom_1582986255_615.jpg)
இதெல்லாம் ரீலில்தான், ரியலில் தாங்கள் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதையும், விஜய் - விஜய் சேதுபதி ஆகியோர் தங்களுக்கு இடையேயான நட்பை உணர்த்தும் விதமாக இருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
![Master shoot wrapped up](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/vijay-and-vijay-sethupathi-1_2902newsroom_1582986255_346.jpg)
#MasterUpdate என்ற ஹேஷ்டாக்கில் ரசிகர்கள் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதையும், விஜய் - விஜய் சேதுபதியின் முத்த புகைப்படத்தை ஷேர் செய்து டிரெண்டிங்கில் டாப் இடத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.