ETV Bharat / sitara

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரை சந்தித்த விஜய்சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரை நேரில் சந்தித்து நம்பிக்கை கொடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
author img

By

Published : Jun 25, 2021, 8:32 AM IST

நடிகர் விஜய்சேதுபதி படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தனது ரசிகர்கள் மீது அளவுக்குக் கடந்த அன்பைச் செலுத்துவார். மிக ஜாலியாக ரசிகர்களிடம் பழகும் இவர், தன்னை காண வரும் இளைஞர்களின் கன்னத்தில் முத்தம் கொடுத்து புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நேற்று (ஜூன்.24) புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

ரசிகரை கட்டி அணைத்த விஜய் சேதுபதி
ரசிகரை கட்டி அணைத்த விஜய் சேதுபதி
சிறுவனின் குடும்பத்துடன் விஜய் சேதுபதி
சிறுவனின் குடும்பத்துடன் விஜய் சேதுபதி

முன்னதாக விஜய் சேதுபதியை நேரில் காண வேண்டும் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்திருந்தார். அதனைக் கண்ட அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள், விஜய் சேதுபதியுடன் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துப்பாக்கி 2: தளபதிக்கு பதில் உலக நாயகன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.