தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு படங்களைக் கொடுப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன் என்று எந்த ரோல் கொடுத்தாலும் அடித்து தூள் கிளப்பும் இவர் தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்', ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் என்று பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அவரது 46ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பொன்ராம் இயக்கும் இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் டி. இமான் இப்படத்தில் பணியாற்றவுள்ளதாக அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU
— Sun Pictures (@sunpictures) March 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU
— Sun Pictures (@sunpictures) March 17, 2021We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU
— Sun Pictures (@sunpictures) March 17, 2021
முன்னதாக பொன்ராம் இயக்கத்தில் வெளியான, ’ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்கள் குடும்பம் சார்ந்தவையாக வெளியானதால், இப்படமும் குடும்ப ரசிகர்களை கவரும் விதமாக இருக்குமென சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
ஆனால், சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், காவல் துறையினரின் வாகனம் காண்பிக்கப்பட்டுள்ளதால் விஜய் சேதுபதி இப்படத்தில் காவல் துறை அலுவலராக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.