ETV Bharat / sitara

'தளபதி 65': ஜார்ஜியாவுக்குப் பறந்த விஜய்! - தளபதி 65 பட அப்டேட்

'தளபதி 65' படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஜார்ஜியா சென்றுள்ளார். முன்னதாக விமான நிலையத்தில் விஜய் முகக்கவசம் அணிந்தபடி சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Vijay
Vijay
author img

By

Published : Apr 7, 2021, 10:41 AM IST

'மாஸ்டர்’ படத்தையடுத்து நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65ஆவது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'கோலமாவு கோகிலா' பட இயக்குநர் நெல்சன் 'தளபதி 65' படத்தை இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத தற்காலிகமாக 'தளபதி 65' என்று அழைக்கப்படும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது. அதில் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது வெளியான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கைச் செலுத்த விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் முகக்கவசம் வைத்தபடி மாஸாக சென்ற புகைப்படம் நேற்றைய தினம் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்தது.

Vijay
ஜார்ஜியா செல்லும் விஜய்

இந்நிலையில், நேற்றிரவு 'தளபதி 65' படப்பிடிப்பிற்காக விஜய் ஜார்ஜியா சென்றார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

ஜார்ஜியாவில் பத்து நாள்களாக நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் கலந்துகொள்கிறார். அதன்பின் மே மாதம் ஐரோப்பாவில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.