லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றுவந்தது.
அப்போது படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு வந்த வருமானவரித் துறை அலுவலர்கள், விஜய்யை தங்களுடன் அழைத்துச் சென்று, சென்னையிலுள்ள அவரது வீட்டில் சோதனையிட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து விஜய்யின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர், படப்பிடிப்பு நடைபெற்றுவந்த இடத்தில் தினந்தோறும் குவியத் தொடங்கினர்.
இந்நிலையில், வருமான வரி சோதனை முடிந்து நெய்வேலியில் இருந்த படப்பிடிப்புத் தளத்திற்கு மீண்டும் திரும்பிய விஜய், அங்கிருந்த வேன் மீது ஏறி, தனக்கு ஆதரவளித்து அங்கு குவிந்திருந்த ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக அவர்களை நோக்கிக் கையசைத்து, அனைவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து இந்த செல்ஃபி புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது. அது மட்டுமல்லாது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் '#ThalapathyVIJAYselfie' என்ற ஹேஷ்டேக்குடன் அப்புகைப்படத்தை ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில், தற்போது இந்த செல்ஃபி புகைப்படம் இந்திய அளவில் பலராலும் பகிரப்பட்ட ட்விட்டர் பதிவு என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.
தற்போது Twitter India #ThisHappened என்ற ஹேஷ்டேக் மூலம் 2020ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட, அதிகம் லைக் செய்யப்பட்ட, அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட, அதிகம் ட்வீட் செய்யப்பட்ட emojis, ட்ரெண்டிங் ஹேஷ்டேக் உள்ளிட்டவைகளை வகைப்படுத்தி பதிவிட்டுவருகிறது. இதில் முக்கியமான விஷயம் Twitter India பக்கத்தில், ஆங்கிலம், தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
-
The most Retweeted Tweet of 2020
— Twitter India (@TwitterIndia) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
2020 में सबसे ज्यादा रीट्वीट हुआ ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் ரிடுவீட் செய்யப்பட்டடுவீட் pic.twitter.com/JpCT4y6fJm
">The most Retweeted Tweet of 2020
— Twitter India (@TwitterIndia) December 8, 2020
2020 में सबसे ज्यादा रीट्वीट हुआ ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் ரிடுவீட் செய்யப்பட்டடுவீட் pic.twitter.com/JpCT4y6fJmThe most Retweeted Tweet of 2020
— Twitter India (@TwitterIndia) December 8, 2020
2020 में सबसे ज्यादा रीट्वीट हुआ ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் ரிடுவீட் செய்யப்பட்டடுவீட் pic.twitter.com/JpCT4y6fJm
அந்த வகையில் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் 2020ஆம் ஆண்டு அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என அறிவித்துள்ளது. இதனையடுத்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் #VIJAYRuledTwitter2020 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடிவருகின்றனர்.
-
The most Quoted Tweet of 2020
— Twitter India (@TwitterIndia) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
2020 का सबसे ज्यादा क़ोट किया गया ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் pic.twitter.com/aqXTnaZI0h
">The most Quoted Tweet of 2020
— Twitter India (@TwitterIndia) December 8, 2020
2020 का सबसे ज्यादा क़ोट किया गया ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் pic.twitter.com/aqXTnaZI0hThe most Quoted Tweet of 2020
— Twitter India (@TwitterIndia) December 8, 2020
2020 का सबसे ज्यादा क़ोट किया गया ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் pic.twitter.com/aqXTnaZI0h
அதேபோல் அனுஷ்கா ஷர்மா, தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும்விதமாக தனது கணவர் கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டது இந்தாண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக அறிவித்துள்ளது.
பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் தனக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்ததையடுத்து தன்னுடன் இருந்தவர்களையும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவித்த ட்வீட் இந்தாண்டு அதிகம் மேற்கோள்காட்டப்பட்ட ட்வீட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Sports or movies? Why fight or choose, you don't need a remote control on Twitter 😉
— Twitter India (@TwitterIndia) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
खेल या फिल्में? लड़ना या चुनना ही जरूरी क्यों हो, आपको ट्विटर पर रिमोट कंट्रोल की जरूरत नहीं है 😉 pic.twitter.com/zgzixgDKgv
">Sports or movies? Why fight or choose, you don't need a remote control on Twitter 😉
— Twitter India (@TwitterIndia) December 8, 2020
खेल या फिल्में? लड़ना या चुनना ही जरूरी क्यों हो, आपको ट्विटर पर रिमोट कंट्रोल की जरूरत नहीं है 😉 pic.twitter.com/zgzixgDKgvSports or movies? Why fight or choose, you don't need a remote control on Twitter 😉
— Twitter India (@TwitterIndia) December 8, 2020
खेल या फिल्में? लड़ना या चुनना ही जरूरी क्यों हो, आपको ट्विटर पर रिमोट कंट्रोल की जरूरत नहीं है 😉 pic.twitter.com/zgzixgDKgv
2020ஆம் ஆண்டு படம் சம்பந்தமாக ட்ரெண்ட் ஆன ஹேஷ் டேக்குகளில், முதல் இடத்தில் சுஷாந்த்சிங்கின் 'தில் பேச்சாரா' சினிமாவும், இரண்டாம் இடத்தில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' சினிமாவும் மூன்றாம் இடத்தில் மகேஷ் பாவுவின் 'சரிலேரு நீகேவரு' சினிமாவும் இடம் பெற்றுள்ளன.