கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் இந்த மாதம் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 75 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இன்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும் தங்களது அன்றாடத் தேவைகளான உணவு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தேனி மாவாட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர், அம்மாவட்டத்திக் உள்ள சுமார் 700 கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு காய்கறிகள் அடங்கிய பைகளை இலவசமாக வழங்கினர். இந்த காய்கறிகள் எல்லாம் ஊடரங்கு உத்தரவால் சந்தைக்கு அனுப்பப்படாமல், முடங்கியுள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ’மது பழக்கத்தை கைவிடுங்கள்’: பார்த்திபன் வேண்டுகோள்