'கீதா கோவிந்தம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா இருவரும் சேர்ந்து நடித்துள்ள படம் 'டியர் காம்ரேட்'. பரத் கம்மா இயக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. காதலை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் அமோக வரவேற்பைப் பெற்றது.
-
Here is the 2nd Single From @TheDeverakonda and @iamRashmika's #DearComrade #Pularaadhahttps://t.co/xOCOd61HOE @bharatkamma @justin_tunes pic.twitter.com/uKFzTadtOP
— yuvraaj (@proyuvraaj) May 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here is the 2nd Single From @TheDeverakonda and @iamRashmika's #DearComrade #Pularaadhahttps://t.co/xOCOd61HOE @bharatkamma @justin_tunes pic.twitter.com/uKFzTadtOP
— yuvraaj (@proyuvraaj) May 15, 2019Here is the 2nd Single From @TheDeverakonda and @iamRashmika's #DearComrade #Pularaadhahttps://t.co/xOCOd61HOE @bharatkamma @justin_tunes pic.twitter.com/uKFzTadtOP
— yuvraaj (@proyuvraaj) May 15, 2019
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்காக தயாராகிவரும் நிலையில், ஜஸ்டின் பிரபாகரனின் மெல்லிய இசையில், கார்த்திக் நேத்தாவின் காதல் வரியில் உருவாகியுள்ள 'புலராத காலைதனிலே.. நிலவோடு பேசும் மழையில்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை 96 படத்தின் பாடல்கள் மூலம் பிரபலமடைந்த பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடல் காதலோடு கவிதை பாட வைக்கிறது. ஒவ்வொரு பாட்டிலும் வித்தியாசம் காட்டி தனது மெல்லிய குரலில் ரசிகர்களை கிறங்கடிக்கும் சித் ஸ்ரீராம், அதேபோன்று இந்தப் பாடலையும் ரசிக்க வைத்துள்ளார். நான்கு மொழிகளிலும் சித் ஸ்ரீராமே பாடியுள்ளார். தற்போது இந்தக் காதல் பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.