ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படமான 'கொலைகாரன்' திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காணப்பட்டார். தற்போது 'காக்கி' திரைப்படத்தை தன் கைவசம் வைத்திருக்கும் விஜய் ஆண்டனி, இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
மேலும் 'மூடர் கூடம்' இயக்குநர் நவீனின் இயக்கத்தில் 'அக்னி சிறகுகள்' திரைப்படத்திலும் விஜய் ஆண்டனி நடிக்கிறார். தற்போது ஊரடங்கு நேரத்தில் எழுத்தாளராக விஜய் ஆண்டனி மாறியுள்ளார்.
தனது நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் இரண்டாம் பாக கதைக்கு திரைக்கதை எழுதும் வேலையில் விஜய் ஆண்டனி தீவிரமாக இறங்கியுள்ளார். முதல்பாகத்தை இயக்கிய சசி இரண்டாம் பாகத்தை இயக்கமாட்டார் என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... அவர் சம்பளத்தை குறைத்தது பெரிய விஷயம் அல்ல, இதுதான் பெரிய விஷயம் - நவீன்