சென்னை: இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'பிச்சைக்காரன்'.
இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்திருந்தார். இதில் சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து விஜய் ஆண்டனி தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'பிச்சைக்காரன் 2' படத்திற்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே கரோனா ஊரடங்கு காலத்தில் எழுதி முடித்தார்.
இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவதாக இருந்தது. அதன்பின் ஆனந்த் கிருஷ்ணன் இயக்குநராக பொறுப்பேற்றார்.
தற்போது அவரும் இதிலிருந்து விலகவே 'பிச்சைக்காரன் 2' படத்தை விஜய் ஆண்டனியே இயக்கவுள்ளார். விஜய் ஆண்டனி இப்படத்தில் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதை, திரைக்கதை, இயக்குநர் என அனைத்திலும் களம் இறங்கியுள்ளார்.
-
Welcome to the Director’s Clan ‘Director’ @vijayantony 👏🏽 Wishing you the very best for #Pichaikkaran2 & #Bichagadu2 😊 Blockbuster 2022 ahead for you! @vijayantonyfilm @mrsvijayantony pic.twitter.com/2AHyYOjceE
— A.R.Murugadoss (@ARMurugadoss) July 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Welcome to the Director’s Clan ‘Director’ @vijayantony 👏🏽 Wishing you the very best for #Pichaikkaran2 & #Bichagadu2 😊 Blockbuster 2022 ahead for you! @vijayantonyfilm @mrsvijayantony pic.twitter.com/2AHyYOjceE
— A.R.Murugadoss (@ARMurugadoss) July 24, 2021Welcome to the Director’s Clan ‘Director’ @vijayantony 👏🏽 Wishing you the very best for #Pichaikkaran2 & #Bichagadu2 😊 Blockbuster 2022 ahead for you! @vijayantonyfilm @mrsvijayantony pic.twitter.com/2AHyYOjceE
— A.R.Murugadoss (@ARMurugadoss) July 24, 2021
'பிச்சைக்காரன் 2' தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது. விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில் தயாராகும் படம் 'பிச்சைக்காரன் 2'. மேலும் இப்படத்திற்காக விஜய் ஆண்டனி பத்து முதல் பதினைந்து கிலோவரை உடல் எடையை குறைக்கவுள்ளார்.
இசையமைப்பாளர், நாயகன், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையுடன் தமிழ்சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்த விஜய் ஆண்டனி, 'பிச்சைக்காரன் 2' படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதின் மூலம் கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் வலம் வர உள்ளார்.
இதையும் படிங்க: கடைசில விஜய் ஆண்டனியையும் இப்படி பண்ண வச்சுட்டிங்கலேப்பா...!