'மெட்ரோ' பட இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தைச் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பூஜை இன்று நடைபெற்றது.
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்கும் இப்படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார்.
'உரு' பட இசையமைப்பாளர் ஜோகன் இசையமைக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதையும் வாசிங்க: 'ரசிகர்கள் என் மீது வைக்கும் நம்பிக்கை வீண் போகாது' - ரஜினிகாந்த்