ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'விஜய்63'. இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரம் கிளைமாக்ஸில் 15 நிமிடங்கள் மட்டுமே வருகிறது. இது, முக்கியமான கதாபாத்திரமாக கருதப்படுவதால் ஷாருக்கானை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன.
இது குறித்து இயக்குநர் அட்லி இரண்டு முறை ஷாருக்கானை சந்தித்து பேசியதையடுத்து, ஷாருக்கான் விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் 15 நிமிடங்கள் மட்டுமே வரும் ஷாருக்கான், தனக்கு சம்பளமாக 'தளபதி 63' படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை கேட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். காரணம் நடிகர் விஜய்யின் இந்தி மார்க்கெட் உரிமை சுமார் 20 கோடி ரூபாய்க்கு விலை போகிறதாம்.
15 நிமிட காட்சிக்காக நடிகர் ஷாருக்கான் ரூ.20 கோடி சம்பளம் கேட்டதால், ஒட்டு மொத்த படக்குழுவினரும் ஷாக்காகி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.