சின்னத்திரையில் இயக்குனராகவும் நடிகராகவும் செயல்பட்டு வருபவர் விக்னேஷ் கார்த்திக். இவர் 'ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல' திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர். இவர் தற்போது வால்மேட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்பு எண்-2 படத்தை இயக்க உள்ளார்.
இதுகுறித்து விக்னேஷ் கார்த்திக் கூறுகையில்,'இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தை கொண்ட வித்தியாசமான திரைப்படம். இந்த படம் நிச்சயம் உலகளாவிய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் வேடிக்கையாகவும், பொழுதுப்போக்காகவும் இருக்கும்.
இந்தப்படத்தின்படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுடப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
மேலும் இப்படத்திற்கு தற்காலிகமாக தயாரிப்பு எண்-2 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், வித்தியாசமான தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் 'யுவர்ஸ் ஷேம்ஃபுலி 2' என்ற அறிவியலும் கற்பனையும் நிறைந்த காதல் நகைச்சுவை குறும்படம் ஒன்பது மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தாலும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றார்.