தமிழில் விஜய் நடித்த 'லவ் டுடே' படத்தின் மூலம் சண்டைப் பயிற்சியாளராக அறிமுகம் ஆனவர், ஸ்டன் ட் சிவா. இவர் அதனைத்தொடர்ந்து சேது, சிம்மராசி, வேட்டையாடு விளையாடு, அனேகன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது இவர் 'வேட்டையன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை வாட்டக்குடி இரணியன், ஜித்தன், யூத் போன்ற படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இயக்குகிறார்.நிமோ புரொடக்ஷன் சார்பில் பாலு தயாரிக்கும் இப்படத்தில் நேகா, யோகிபாபு, சார்லி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோலமாவு கோகிலா படத்துக்காக பஞ்சாப் பறந்த ஜான்வி