பெங்களூரு: கன்னட மூத்த நடிகர் சத்யஜித் இன்று (அக்.10) அதிகாலை 2 மணிக்கு பெங்களூருவில் காலமானார்.
72 வயதான சத்யஜித் (72) கடந்த சில மாதங்களாக கடுமையான நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த காலத்தில் கேங்க்ரீன் (தசை செயலிழப்பு) காரணமாக அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்து பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சத்யஜித் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவரால் குணமடைய முடியவில்லை, இன்று தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.
இதையடுத்து, அவரது உடல் பவுரிங் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றன.
சத்யஜித் கன்னடம் தவிர தமிழ், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். கன்னட நடிகர்களான ராஜ்குமார், விஷ்ணுவர்தன், புனித் ராஜ்குமார் மற்றும் கிச்சா சுதீப் போன்ற மூத்த மற்றும் முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சத்யஜித் பெரும்பாலும் துணை மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றார். இவர் அண்மையில் உபேந்திராவின் மனைவி பிரியங்கா உபேந்திரா நடித்த ‘செகண்ட் ஹாஃப்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார்