ETV Bharat / sitara

வெளியானது 'லாக்கப்' ட்ரெய்லர்!

author img

By

Published : Jul 28, 2020, 3:53 PM IST

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள 'லாக்கப்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

லாக்கப்
லாக்கப்

வெங்கட் பிரபுவின் 'சரோஜா' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் வைபவ். 'கோவா', 'ஈசன்', 'மங்காத்தா', 'ஆம்பள' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர், 'மேயாத மான்' படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'சிக்ஸர்' திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லாக்கப்' . கிரைம் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தை இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். இதில் வைபவுக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபு காவல் துறை அலுவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'ஜருகண்டி' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா 'லாக்கப் ' படத்தைத் தயாரித்துள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கால் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்து மூடப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி, zee-5 தளத்தில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இதில் அப்பாவி காவலராக தோன்றும் வைபவ், இவரை மிரட்டும் வெங்கட் பிரபு, இவர்கள் இருவரையும் துரத்தும் ஈஸ்வரி என ட்ரெய்லர் முழுவதும் ரசிகர்களை ஒருவிதமான பரபரப்பு சூழலை படக்குழுவினர் வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.