'வந்தா ராஜாவதான் வருவேன்' படத்திற்கு பின் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருக்கும் சிம்பு, ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் 'நான் ஈ' சுதீப் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் சிம்புடன் கல்யாணி பிரியதர்ஷனை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகை, துணை கதாபாத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.