ETV Bharat / sitara

வெந்து தணிந்தது காடு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

author img

By

Published : Dec 10, 2021, 2:31 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும், 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி வெளியாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி புதிய படத்தில் இணைந்துள்ளது.

ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சிம்புவின் 47ஆவது படமான இதற்கு 'வெந்து தணிந்தது காடு' எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. 15 கிலோ எடையை இப்படத்திற்காகக் குறைத்து சிம்பு அசத்தி இருக்கிறார்.

திருச்செந்தூர், சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் படத்தின் Glimpse வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி குரலில் வீடியோ தொடங்குகிறது.

கிராமத்திலிருந்து, மும்பை சென்ற சிம்புவிற்கு நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாகியுள்ளதுபோல் தெரிகிறது. மேலும் Glimpse வீடியோவைப் பார்க்கும்போதும், 'அச்சம் என்பது மடமையடா' பகுதியின் இரண்டாவது பாகம்போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'புஷ்பா' படக்குழுவுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.