ETV Bharat / sitara

நவீன மயமான 'வசந்த மாளிகை'...! - சிவாஜி

சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான 'வசந்த மாளிகை' மீண்டும் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.

vasantha
author img

By

Published : Jun 19, 2019, 10:42 AM IST

தெலுங்கில் நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான படம் 'பிரேமம் நகர்'. இந்தப் படம் தமிழில் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ நடிப்பில் 'வசந்த மாளிகை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

கே எஸ் பிரகாஷ் இயக்கிய இப்படம் 1972இல் திரைக்கு வந்து 25 வாரங்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை நிகழ்த்தியது. இலங்கையிலும் அதிக நாட்கள் இந்தப் படம் ஓடியது.

தமிழில் வந்த முதல் 'காதல் படம்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம். இந்தப் படத்தில் இடம்பெற்ற மயக்கமென்ன, யாருக்காக, குடிமகனே , ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன், கலைமகள் கைப்பொருளே போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.

இந்நிலையில் தற்போது வசந்த மாளிகை படத்தை இயக்குநர் விசி குகநாதன், ஃபிலிமில் இருந்து நவீன தொழில்நுட்பமான டிஜிட்டலுக்கு மாற்றி உள்ளார். அதுமட்டுமல்லாது கலர்-ஒலி ஒளியிலும் மெருகேற்றப்பட்டு இந்த படம் நாளை மறுநாள் (ஜூன் 21) வெளியாகவுள்ளது.

Intro:ஜூன் 21-ஆம் தேதி டிஜிட்டலில் வெளியாகிறது சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை.

Body:தெலுங்கில் நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான படம் "பிரேமம் நகர்". இந்த படம் தமிழில் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ நடிப்பில் வசந்த மாளிகை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கே எஸ் பிரகாஷ் இந்த படத்தை இயக்கினார். இந்த படம் 1972 இல் திரைக்கு வந்தது 25 வாரங்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை நிகழ்த்தியது. இலங்கையிலும் அதிக நாட்கள் இந்த படம் ஓடியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வந்த முதல் காதல் படம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் படம். காதலில் தோல்வி அடைந்தவர்கள் இந்த படத்தை பார்த்த பிறகு தான் தாடி வைக்க தொடங்கினர். இந்த படத்தில் இடம்பெற்ற மயக்கமென்ன, யாருக்காக, குடிமகனே ,ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ,கலைமகள் கைப்பொருளே போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன

Conclusion:இந்நிலையில் தற்போது வசந்த மாளிகை படத்தை இயக்குனர் விசி குகநாதன் பிலிமில் இருந்து நவீன தொழில்நுட்பமான டிஜிட்டலுக்கு மாற்றி உள்ளார் அதோடு கலர் மற்றும் ஒலி ஒளியிலும் மெருகேற்றப்பட்டு இந்த படம் ஜூன் மாதம் 21 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகவுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.