ETV Bharat / sitara

'மைக்கேல்' படத்தில் இணைந்த வரலட்சுமி!

author img

By

Published : Jan 20, 2022, 6:23 PM IST

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் மைக்கேல் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

'மைக்கேல்' படத்தில் இணைந்த வரலட்சுமி!
'மைக்கேல்' படத்தில் இணைந்த வரலட்சுமி!

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'மைக்கேல்'.

பிரமாண்டமான ஆக்‌ஷன் என்டர்டெயினரான இத்திரைப்படமானது தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படம் தொடங்கப்பட்டதிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்பிலும், படம் மிகப்பிரமாண்ட நிலையை எட்டி வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார்.

முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்த மீரா ஜாஸ்மின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.