சமீபத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டானது. அவர் தனது நடிப்பில் உருவான ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், சென்னை தி. நகர் கிருஷ்ணா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் விலையுயர்ந்த பொருள்கள் திருடப்பட்டுள்ளன.
ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ.15 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் அவரது இல்லத்திலிருந்து திருடப்பட்டுள்ளன. இது குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அக்கம்பக்கம் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்துவருகின்றனர். பாரதிராஜாவின் பணியாட்கள் திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர்களையும் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.