ETV Bharat / sitara

Valimai Update: மாஸாக வெளியான 'வலிமை' பட மோஷன் போஸ்டர் - வலிமை அப்டேட்

தமிழ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த, 'வலிமை' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Valimai Update: பக்கா மாஸாக வெளியான வலிமை பட அப்டேட்

author img

By

Published : Jul 11, 2021, 6:13 PM IST

Updated : Jul 11, 2021, 6:55 PM IST

இயக்குநர் ஹெச். வினோத் அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை' என்னும் படத்தை இயக்கிவிட்டு, இப்போது 'வலிமை' என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

படப்பிடிப்பு ஆரம்பித்து நீண்டநாட்களாகியும் 'வலிமை' திரைப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது.

இதனால் பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள், யூரோ கால்பந்து தொடர் தொடங்கி உள்ளூர் பூசாரிவரை அனைவரிடமும் 'வலிமை' பட அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். ஆனால், தயாரிப்பு தரப்போ எதற்கும் அசரவில்லை. தொடர்ந்து மவுனம் காத்து வந்தது.

இந்நிலையில், பல தரப்பு ரசிகர்களின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க, 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.

வலிமை படத்தில் அஜித்
'வலிமை' படத்தில் கூலரில் படுஸ்டைலிஷாக அஜித்

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், 'காத்திருந்தது முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் போகலாம்' என்றுகூறி, அப்படத்தின் மோஷன் போஸ்டர் லிங்கினைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் 'வலிமை' படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் பகிர்ந்துள்ள ட்வீட்டில், 'வலிமை' என்பது மனதின் நிலை என்னும் பொருள்படும் Power Is A State Of Mind என்னும் வார்த்தையைப் பதிந்துள்ளார்.

Valimai Update: மாஸாக வெளியான 'வலிமை' பட மோஷன் போஸ்டர்

வெறி ஏற்றும் கண்களுடன் 'வலிமை' பட அஜித்

மேலும் 'நீங்கள் இப்படத்தின் அப்டேட்டுக்காக பல நாட்கள் காத்து இருந்துவிட்டீர்கள். இப்போது வலிமை மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வலிமை படத் தலைப்பு
வெளியான வலிமை படத் தலைப்பு

என்னை எப்போதும் நம்பும் அஜித் சாருக்கு என் நன்றி. சம்பவம் தரமா இருக்கா?' என்று கேள்வி எழுப்பி, வலிமை மோஷன் போஸ்டர் குறித்து, தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

'வலிமை' பட மோஷன் போஸ்டரில், நடிகர் அஜித் ட்ரிம் செய்த தாடியுடன் மிகவும் மாஸாக, படு ஸ்டைலிஷாக கூலர்களை அணிந்து காட்சி தருகிறார்.

இது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: லைட்மேன் மடியில் படுத்து தூங்கிய அஜித் - விஜயலக்‌ஷ்மி சுவாரஸ்ய தகவல்

Last Updated : Jul 11, 2021, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.