சென்னை: சினிமாவில் நடிக்கும் நடிகைகளைவிட சமீப காலமாக, சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவருகின்றனர். அந்த வரிசையில் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளார்.
'மாப்பிள்ளை', 'ராஜா ராணி' உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், வைஷாலி. இவர் தற்போது கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு ஆகிய தொடர்களில் நடித்துவருகிறார்.
இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது காதலர் சத்ய தேவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, இதுதான் தன்னுடைய கடைசி பேச்சுலர் பிறந்தநாள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், இன்னது உங்களுக்குக் கல்யாணமா? என அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "திருமணத்திற்கான ஷாப்பிங்கில் இருவரும் ஈடுபட்டுள்ளோம்" எனத் தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.