சென்னை: 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தில், தனது பகுதி காட்சிகளை ரஜினி நிறைவு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்காக ஒன்றிய அரசின் அனுமதி பெற்று, தனி விமானம் மூலம் ரஜினி அமெரிக்கா சென்றார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் ரஜினியிடம் தான் பேசியதாகவும், மருத்துவ சோதனை நன்றாக முடிவடைந்ததாக அவர் தெரிவித்தார் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனக்கே உரிய கவிதை நடையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் " அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம் - நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன்.
அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் ரஜினி: வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்