புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், கவிதை ஓராயிரம் என்னும் நூலை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்.
புதுச்சேரி அரசின் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலகத் தமிழ் கவிதை ஓராயிரம் என்னும் நூலை கவிப்பேரரசு வைரமுத்து முன்னிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்து வெளியிட சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து,
இந்தியாவின் எந்த மொழிக்கும் ஆபத்துக்கு வரக்கூடாது. உலக மயமாக்கல் என்னும் பூதம் தமிழை விழுங்கிவிடக் கூடாது. அந்த பூதத்தை தின்று செரிக்கும் ஆற்றலை நாம் தர வேண்டும். தமிழ் பலரை தாண்டி வந்துள்ளது. இந்தியையும் தாண்டி வந்துள்ளது. தமிழுக்குள் உலகம் வரட்டும் என்றார்.