சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் அறிமுக விழா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் சுராஜ், வைகைப்புயல் வடிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் சுராஜ் பேசுகையில், இது இரண்டு வருடம் பேசி தயார் செய்த படம். சுபாஷ்கரன் இந்தியா வந்து வடிவேலுவுக்கு கதவை திறந்து வைத்துள்ளார். நீண்ட வருடங்கள் கழித்து வருகிறோம். வடிவேலுவின் இடம் காலியாக உள்ளது. அது அவருக்கான இடம். அவரால்தான் அதனை நிரப்ப முடியும் என்றார்.
வடிவேலு பேசுகையில், இதுபோன்ற துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்க முடியாது. இது எனது வாழ்வில் மிகப்பெரிய சூறாவளி. கடந்த நான்கு வருடமாக நடிக்காமல் இருந்தாலும், எனக்காக நீங்கள் வந்திருப்பது கடவுள் அளித்த வரம். கரோனா பிரச்னையால் எனது பிரச்னை சாதாரணமாக ஆகிவிட்டது. இந்த நேரத்தில் எனது நகைச்சுவை மக்களுக்கு மருந்தாக இருந்தது எனக்கு கிடைத்த பெருமை. எனக்கு வாழ்க்கை அளித்தவர் சுபாஷ்கரன். மக்களை நன்றாக சிரிக்கவைத்த பின்னர் தான் எனது உயிர் பிரியும். மக்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. அவரை பார்த்த பின்னர் எனக்கு நல்லது நடந்துள்ளது என்றார்.
மேலும் அவர், நயன்தாரா என்னுடன் நடிக்கவில்லை. இதில் கதாநாயகி கிடையாது. எனக்கு என்டே கிடையாது. ஷங்கர் தரப்பு சொன்னது எல்லாம் பொய். அந்த பிரச்னை முடிந்துவிட்டது. இனி ஷங்கர் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை.
இதையும் படிங்க: தலைவி: யாருக்கும் "வலி" இல்லா ஒரு வாழ்க்கை வரலாறு