ETV Bharat / sitara

’விரைவில் உங்களை திரையில் மகிழ்விப்பேன்’ - நடிகர் வடிவேலு - நகைச்சுவை நடிகர் வடிவேலு பிறந்தநாள் வாழ்த்துகள்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் வடிவேலு நன்றி தெரிவித்தார்.

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு
author img

By

Published : Sep 13, 2020, 5:07 PM IST

நகைச்சுவை எக்ஸ்பிரஸ் நடிகர் வடிவேலுவிற்கு நேற்று (செப்.,12) பிறந்தநாள். இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் மீம் கிரியேட்டர்கள் பல விதங்களில் மீம்ஸ் பதிவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கு நன்றி என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”அன்போடு வாழ்த்திய நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள் 🙏❤️ விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். இதனுடன் காணொலி ஒன்றினையும் இணைத்துள்ளார். அதில், ”தினம் நான் மக்களைச் சிரிக்க வைப்பதால் நாள்தோறும் எனக்கு பிறந்தநாள் தான். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவைச் செல்வமாக நான் பிறந்து கொண்டு தான் இருக்கிறேன்.

நடிகர் வடிவேலு பேசிய காணொலி

என்னை பெற்ற தாய்க்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சக்தி இல்லையென்றால் வடிவேலுவே கிடையாது. என் தாய்க்கு பின்னர் மக்கள் தான். ஏன் இன்னும் நடிகர் வடிவேலு நடிக்கவில்லை என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும். சைத்தான்கள் எல்லார் வாழ்விலும் இருப்பது போல் என்னுடைய வாழ்விலும் ஆங்காங்கே இருக்கிறது. நான் விரைவில் திரையில் எண்ட்ரி கொடுப்பேன்” என்றார்.

இதையும் படிங்க:தயவு பண்ணி வெளிய வராதீக - கைகூப்பி கெஞ்சும் வடிவேலு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.