ஆசிப் குரைஷி இயக்கத்தில் உதயா, பிரபு நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான படம் 'உத்தரவு மகாராஜா'. இப்படத்தில் உதயாவுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருந்தார். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை 'ஜேஷன் ஸ்டுடியோஸ்' தயாரித்திருந்தது.
இப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இந்தப் படத்திற்கு அப்போது மக்கள் மத்தியிலும் திரையுலக பிரபலங்கள், ஊடகங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது.
'உத்தரவு மகாராஜா' வெளியான அதே நாளில் பல திரைப்படங்கள் வெளியானதால் இத்திரைப்படத்திற்கு போதுமான திரையரங்குகள் அப்போது கிடைக்கவில்லை.
இந்நிலையில் 'உத்தரவு மகாராஜா' திரைப்படத்தை மீண்டும் 'கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்' சார்பில் மே மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.