சென்னை: தமிழகத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஓரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் இத்தேர்தலில் போட்டியிட உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 115 பேர் வெற்றி பெற்றனர். அவர்களை சென்னைக்கு அழைத்து விருந்து அளித்த நடிகர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
மாநில நிர்வாகிகள் கூட்டம்
இதனையடுத்து சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டம் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது . 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தனித்தனியே தங்களது கருத்துக்களை ஆனந்த்திடம் தெரிவித்தனர்.
நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த புஸ்ஸி ஆனந்த்,
" நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட தலைவர்கள் , நிர்வாகிகள் , அணித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்ட தலைவர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விஜய் உத்தரவிட்டபடி மாவட்ட தலைவர்கள் , அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தலைமைக்கு வேட்பாளர்கள் பட்டியலை சமர்ப்பிப்பர். அதன் பிறகு விஜய் வழிகாட்டுதல் படி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.
ஆட்டோ சின்னத்திற்கு மறுப்பு
மாநில தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நிர்வாகிகள் இடையே , நீங்கள் எதிர்பார்க்கும் விசயத்தை விஜய் விரைவில் அறிவிப்பார் என கூறியது அரசியல் கட்சி அறிவிப்புதானே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு புன்னகையுடன் பதிலளிக்க மறுத்து புறப்பட்டார் புஸ்ஸி ஆனந்த்.
இதையும் படிங்க:நடிகர் விஜய் சொகுசு கார் இறக்குமதி வழக்கு: நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை!