தமிழ்நாடு முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடையே கோரிக்கைவிடுத்திருந்தார்.
அக்கோரிக்கையை ஏற்று முதலமைச்சரிடம் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பலரும் நிவாரண நிதி வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் கரோனா தடுப்புப் பணிக்காக கனடா விஜய் ரசிகர் மன்றம் சார்பில் கார்த்திக், ஜனனி ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைச் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதியிடம் வழங்கினர். இந்தச் சந்திப்பின்போது, இசையமைப்பாளர் பரத்வாஜ் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’நாளைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ - விஜய் மக்கள் இயக்கம்